இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி பாதையை நோக்கி இந்தியா…

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி பாதையை நோக்கி இந்தியா…

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே சேப்பாக்கத்தில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது.

Image

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 300 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 95.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது அதிரடியாக ஆடிய பண்ட் 58 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

பிறகு தனது ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது , ஆடுகளம் சுழலுக்கு மிகவும் சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள திணறினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், சுழலை சமாளித்து சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.59.5 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பிறகு 197 ரன்கள் முன்னிலை உடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பித்திலே சுபமன் கில்லைவிக்கெட்யை இழந்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து இருந்தது , ரோகித் 25 ரன்களுடனும் , புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.