பாலோஆன் கொடுக்காமல் இந்தியாவிற்கு வலை விரிக்கும் இங்கி… திட்டம் முறியடிக்கப்படுமா?

 

பாலோஆன் கொடுக்காமல் இந்தியாவிற்கு வலை விரிக்கும் இங்கி… திட்டம் முறியடிக்கப்படுமா?

இங்கிலாந்து அணியை எளிதில் சொந்த மண்ணில் வீழ்த்திவிடலாம் என்ற தப்பான கணக்கை கோலி&கோ போட்டிருக்கிறது. சென்னை ஆடுகளம் ஸ்பின்னுக்கு உதவும் என்று எண்ணி மூன்று ஸ்பின்னர்களை எடுத்ததும் ஒருவகையில் டிராபேக்காக முடிந்திருக்கிறது. டெஸ்ட்டின் மூன்று நாள்களிலும் இங்கிலாந்தே ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து டிபார்ட்மெண்டிலும் இந்தியாவைக் காட்டிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

பாலோஆன் கொடுக்காமல் இந்தியாவிற்கு வலை விரிக்கும் இங்கி… திட்டம் முறியடிக்கப்படுமா?

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து. முதலில் இரு விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தாலும் கேப்டன் ரூட்-சிப்லே ஜோடி பொறுப்புடன் விளையாடி சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தது. 87 ரன்களில் சிப்லே பெவிலியன் திரும்பினாலும் ரூட் மட்டுமே இந்திய பவுலர்களை ஆட்டம் காட்டிவிட்டார். பவுலர்களை வீழ்த்தி அதிரிபுதிரியாக இரட்டை சதம் அடித்து ஸ்கோரை 500க்கும் அதிகமாகத் தாண்ட பேருதவி செய்துவிட்டார்.

பாலோஆன் கொடுக்காமல் இந்தியாவிற்கு வலை விரிக்கும் இங்கி… திட்டம் முறியடிக்கப்படுமா?

பவுலிங், பீல்டிங்கில் தான் இந்தியா கோட்டைவிட்டது பேட்டிங்கில் சரிசெய்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தால், கேப்டன் கோலி, துணை கேப்டன் ரஹானே அனுபவ வீரர் ரோஹித் சர்மா, இளம்வீரர் கில் என அனைவரும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்தனர். புஜாரா-பண்ட் ஜோடி மட்டுமே இந்திய அணியை சரிவிலிருந்து ஓரளவு மீட்டது. இருவரும் தத்தமது கேம்களை ஆடினர். பண்ட் அதிரடியாக ஆடினாலும், புஜாரா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா 73 ரன்களில் வெளியேற கூட்டணி முடிவுக்கு வந்தது. அதிரடியாக ஆடிய பண்ட் 91 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 300 ரன்களையாவது தொடுமா என்ற சந்தேகம் எழுந்தது.

பாலோஆன் கொடுக்காமல் இந்தியாவிற்கு வலை விரிக்கும் இங்கி… திட்டம் முறியடிக்கப்படுமா?

இச்சூழலில் இணைந்த அஸ்வின் – சுந்தர் ஜோடி நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து 300 ரன்களைக் கடக்க உதவியது. ஆனால் அஸ்வின் நீண்ட நேரம் நிலைக்காமல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். யார் போனாலும் சரி நான் அதிரடியாகத் தான் விளையாடுவேன் என்ற பாணியில் சுந்தர் விளையாடினார். ஆனால் அவருக்கு உதவியாக எந்த டெய்லெண்டர்களும் களத்தில் இல்லை என்பதே பரிதாபம். இறுதியில் சுந்தர் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாலோஆனை தவிர்க்க 379 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 337 ரன்களில் இந்தியா வீழ்ந்தது.

பாலோஆன் கொடுக்காமல் இந்தியாவிற்கு வலை விரிக்கும் இங்கி… திட்டம் முறியடிக்கப்படுமா?

இச்சூழலில் இந்திய அணிக்கு பாலோஆன் கொடுக்காமல் இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்திய அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தற்போது இங்கிலாந்து அணி 241 ரன்கள் முன்னிலையில் இருப்பதால், பேட்டிங் ஆடி 150 ரன்களுக்கு மேல் அடித்தால் போதும். 400 ரன்களை இலக்காக நிர்ணயித்து இந்தியாவை வீழ்த்தி விடலாம் என்ற திட்டத்தை இங்கிலாந்து வகுத்திருக்கிறது. தற்போது ஆடுகளமும் பவுலிங்குக்கு நன்றாக எடுபட்டுவருவதால் பவுலிங் படையைக் கொண்டு இந்தியாவைச் சுருட்டிவிடலாம் என்ற நோக்கில் இங்கிலாந்து களமிறங்கியிருக்கிறது. இங்கிலாந்தின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா ஆட்டத்தில் வெற்றிகாணுமா? அவ்வணியின் வலையில் வீழ்ந்துவிடுமா? இரு அணிகளுக்கும் பாதகம் இல்லாமல் ஆட்டம் டிரா ஆகுமா?