ஆரம்பமே இந்தியா அசத்தல்… கேப்டன் ரூட்டை மலை போல் நம்பும் இங்கிலாந்து!

 

ஆரம்பமே இந்தியா அசத்தல்… கேப்டன் ரூட்டை மலை போல் நம்பும் இங்கிலாந்து!

மதிய உணவு இடைவேளையில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி திணறிக் கொண்டிருக்கிறது.

ஆரம்பமே இந்தியா அசத்தல்… கேப்டன் ரூட்டை மலை போல் நம்பும் இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. சென்னை மைதானம் ஸ்பின் ட்ராக் என்பதால் அஸ்வின், சபாஷ் நதீம், வாசிங்டன் சுந்தர் என மூன்று ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கியிருக்கிறது. இதில் அஸ்வினுக்கும் சுந்தருக்கும் ஹோம் ட்ராக் என்பதாலும், ஆல்ரவுண்டர்கள் என்பதாலும் இந்திய அணி சற்று பலம் பொருந்திய அணியாக இருக்கிறது.

ஆரம்பமே இந்தியா அசத்தல்… கேப்டன் ரூட்டை மலை போல் நம்பும் இங்கிலாந்து!

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸும் டொமினிக் சிப்லேவும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தையே கடைப்பிடித்தனர். ஒவ்வொரு பந்தையும் கவனமாகக் கையாண்டாலும், அஸ்வின் பர்ன்ஸின் விக்கெட்டை உறுவிவிட்டார். 33 ரன்களில் பர்ன்ஸ் வெளியேறினார். அவரைத் தொடர்ந்துவந்த லாரன்ஸ் ஐந்து பந்துகளை எதிர்கொண்டும் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா வேகத்தில் நடையைக் கட்டினார். தற்போது களத்தில் கேப்டன் ஜோ ரூட்டும் சிப்லேவும் உள்ளனர். திணறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியை கேப்டன் ரூட் மீட்பாரா? இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?