சொதப்பும் கீப்பர் ரிஷப் பண்ட் – நிலைத்து ஆடும் ஆஸ்திரேலியா #IndVsAus_updates

 

சொதப்பும் கீப்பர் ரிஷப் பண்ட் – நிலைத்து ஆடும் ஆஸ்திரேலியா #IndVsAus_updates

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான, ஒருநாள் போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் இந்தியாவும் வென்றது.

நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றியை ருசித்துள்ளன. இன்று தொடங்கிய மூன்றாம் டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது.

சொதப்பும் கீப்பர் ரிஷப் பண்ட் – நிலைத்து ஆடும் ஆஸ்திரேலியா #IndVsAus_updates

ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் வீரர்களாக புகோவ்ஸ்கி களம் இறங்கினார். அவருக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி. அவருடன் சீனியர் வீரர் டேவிட் வார்னர் இணைந்தார்.

வார்னரின் வருகை அணிக்குப் பெரும் பலம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வார்னரின் விக்கெட்டை தூக்கினார் முகம்மது சிராஜ்.

ஆனால், புகோவ்ஸ்கி, லபுஷேன் ஜோடி சிறப்பாக ஆடியது. நல்ல பார்டனர் ஷிப் அளித்தது. இருவரையும் பிரிக்க பும்ராவும் சிராஜ் அஸ்வின் பல வகைகளிலும் முயன்றும் முடியவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகும் சைனி புகோவ்ஸ்கி விக்கெட்டை வீழ்த்தினார். எல்.பி.டபுள்யூ முறையில் புகோவ்ஸ்கி ஆட்டமிழந்தார். தற்போது ஸ்டீவ் ஸ்மித் – லபுஷேன் ஜோடி நிலைத்து ஆடி வருகிறது.

சொதப்பும் கீப்பர் ரிஷப் பண்ட் – நிலைத்து ஆடும் ஆஸ்திரேலியா #IndVsAus_updates

55 ஓவர்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய அணி 166 ரன்களை எடுத்துள்ளது.

புகோவ்ஸ்கி 26 ரன்களை எடுத்திருந்த நிலையில் அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முடியன்றபோது அது கீப்பர் ரிஷப் பண்ட்டின் ஒரு கேட்ச்க்கான வாய்ப்பாக மாறியது. எளிதான கேட்சை தவற விட்டார் ரிஷப் பண்ட்.

அதேபோல சிராஜ் வீசிய ஓவர் ஒன்றிலும் புகோவ்ஸ்கி அடிக்க முயன்ற ஷாட் தவறியதால் ரிஷப் பண்ட்டிடம் கேட்சாக வந்தது. அதையும் கோட்டை விட்டார்.

ரிஷப் பண்ட் கேட்ச்களைப் பிடித்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு நெருக்கடி வந்திருக்கும். ஆனால், இப்போது ரிலாக்ஸாக ஆடி வருகிறார்கள்.