’ஒருத்தர் கூட 10 ரன் அடிக்கல’ மிக மோசமாக விளையாடி இந்திய வீரர்கள் – IndVsAus Updates

 

’ஒருத்தர் கூட 10 ரன் அடிக்கல’ மிக மோசமாக விளையாடி இந்திய வீரர்கள் – IndVsAus Updates

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள்.

முதல் ஆட்ட முடிவில் 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. 11 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்தது. இந்தியாவின் ஸ்கோர் 244.

’ஒருத்தர் கூட 10 ரன் அடிக்கல’ மிக மோசமாக விளையாடி இந்திய வீரர்கள் – IndVsAus Updates

அடுத்து ஆடிய 72.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. தொடக்கத்தில் விக்கெட் ஏதும் எடுக்காத உமேஷ் யாதவ் கடைசியில் விக்கெட் மழைபெய்ய வைத்தார். ஆம், உமேஷ் யாதவ் 4, அஸ்வின் 3, பும்ரா 3 என ஆஸ்திரேலிய வீரர்களை கட்டுக்குள் வைத்து வீழ்த்தினர்

இரண்டாம் இன்னிங்க்ஸை நம்பிக்கையுடன் தொடங்கியது இந்திய அணி. தொடக்கம் முதல் இறுதி வரை ஏமாற்றமே மிஞ்சியது. தொடக்க வீரர்கள் ப்ரித்தி ஷா 4, மயங்க் அகர்வால் 9 ரன்களோடு அவுட்டாக முதல் கோணல் தொடங்கியது.

வேகப்பந்து வீச்சாளார் பும்ராவை ஒன் டவுன் இறக்கி விட இரண்டு ரன்களில் அவுட்டானர். டெஸ்ட்டில் அசத்துவார், வெற்றிக்கு அழைத்துச் செல்வார் எனப் பலராலும் நம்பப்பட்ட புஜாரா டக் அவுட்டானார். விராட் கோலி 4, ரஹானே 0, விஹாரி 8, சஹா 4 என ஒற்றை இலக்க ரன்களோடு திரும்பினர்.

’ஒருத்தர் கூட 10 ரன் அடிக்கல’ மிக மோசமாக விளையாடி இந்திய வீரர்கள் – IndVsAus Updates

அஸ்வின் 0, உமேஷ் யாதவ் 4, முகம்மது சமி 1 என அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்களில் மொத்த அணியும் ஆட்டமிழந்தது. ஒருவர் கூட, இரட்டை இலக்க ரன்னைத் தொட வில்லை. மூன்று பேர் டக் அவுட்.

இதனால், 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கோடு மூன்றாம் ஆட்டத்தைத் தொடர்கிறது ஆஸ்திரேலிய அணி. தற்போதுவரை 15 ரன்களை விக்கெட் இழப்பில்லாமல் எடுத்து விட்டது. இன்னும் ஒன்றரை நாட்கள் நேரமிருக்க , ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 75 ரன்களே தேவை. அநேகமாக இன்றுக்குள் எளிதாக வென்றுவிடும் ஆஸ்திரேலியா.