88 பந்துகளில் 17 ரன்கள் – நிதானமாக ஆடும் புஜாரா! IndVsAus டெஸ்ட் Updates

 

88 பந்துகளில் 17 ரன்கள் – நிதானமாக ஆடும் புஜாரா! IndVsAus டெஸ்ட் Updates

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியிருக்கிறது.

முன்னதாக, ஒருநாள் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோற்றதால் ஆஸ்திரேலியா தொடரை வென்றது. டி20 தொடரில் செய்தது இந்திய அணி, முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று தொடரையும் கைப்பற்றியது. தமிழகத்தின் நடராஜன் தங்கராசு உலகம் முழுவதும் தன் பெயரை ஒலிக்கும்படி பந்து வீச்சில் அசத்தினார்.

88 பந்துகளில் 17 ரன்கள் – நிதானமாக ஆடும் புஜாரா! IndVsAus டெஸ்ட் Updates

இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் என தேர்வு செய்தார். இது ஒருவகையில் நல்லதே… முதலில் பீல்டிங் எனும்போது வீரர்கள் சோர்வாகி விடுவார்கள்.

ஓப்பனிங் வீரர்களாக ப்ரித்தீவ் ஷாவும் மயங் அகர்வாலும் இறங்கினார்கள். அவசரப்பட்டு ஆடிய ப்ரித்தீவ் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அவரின் விக்கெட்டை பறித்தது மிட்செல் ஸ்டார்க்.

அடுத்து புஜாரா களம் இறங்கினார். மறுமுனையில் பந்துகளின் போக்குகளுக்கு ஏற்ப ஆடி வந்த மயங் 2 பவுண்ட்ரிகளை விளாசினார். 44 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார் மயங்.

88 பந்துகளில் 17 ரன்கள் – நிதானமாக ஆடும் புஜாரா! IndVsAus டெஸ்ட் Updates

அடுத்து களமிறங்கி ஆடி வருகிறார் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட் இல்லாத குறையைப் போக்கும் புஜாரா 88 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெகு நிதானமாக ஆடி வருகிறார்.

25 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எனும் நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது இந்திய அணி.