டிக்டாக் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி!

 

டிக்டாக் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி!

டிக்டாக், சேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாத இறுதியில் டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 267 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இது எல்லையில் சீனாவின் தொல்லைகளுக்கு இந்தியா கொடுத்த பதிலடி எனக் கூறப்பட்டது.

இருப்பினும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாகவும் கூறி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சீன செயலிகளுக்கு தடை விதித்தது.

டிக்டாக் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி!

இதையடுத்து தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்கள் தடையை நீக்க மத்திய அரசிடம் கோரியிருந்தன. அதற்கு மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில், பயனர்களின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, அவை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

சமீபத்தில், நிறுவனங்கள் நோட்டீஸுக்கு மத்திய அரசிடம் விளக்கமளித்திருந்தன. அந்த விளக்க்கங்கள் மத்திய அரசுக்கு திருப்திகரமாக அமையாததால், தடையை காலவரையின்றி நீட்டித்தது.

டிக்டாக் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி!

இந்நிலையில், இந்தியாவின் இறையாண்மையைக் கெடுக்கும் வகையில் இயங்கும் டிக்டாக், சேர்இட், பிகோ லைவ், யூசி பிரவுசர், பைடு, வீசாட், கிளப் பேக்டரி, ஜியோமி வீடியோ கால் உள்ளிட்ட 59 சீன செயலிகள் நிரந்தரமாக தடை செய்யப்படுவதாக ஐடி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.