“கொரோனா தடுப்பூசிக்கும் கடும் தட்டுப்பாடு… ஜூலை வரை இதே நிலை தான்”

 

“கொரோனா தடுப்பூசிக்கும் கடும் தட்டுப்பாடு… ஜூலை வரை இதே நிலை தான்”

இந்தியாவே கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்து செல்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இதனால் தடுப்பூசியின் தேவையை உணர்ந்து பல்வேறு மாநிலங்களும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளன.

“கொரோனா தடுப்பூசிக்கும் கடும் தட்டுப்பாடு… ஜூலை வரை இதே நிலை தான்”

மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தடுப்பூசி உற்பத்தி மிகவும் சுணக்கமாக இருப்பதால், மாநிலங்களுக்கு நிறுவனங்களால் தடுப்பூசிகளை அனுப்ப முடியவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பல கோடி தடுப்பூசிகள் கேட்டிருக்கின்றன. இதனால் 15 மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

“கொரோனா தடுப்பூசிக்கும் கடும் தட்டுப்பாடு… ஜூலை வரை இதே நிலை தான்”

இச்சூழலில் கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவன சிஇஓ அதார் பூனாவலா கூறுகையில், “இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 10 கோடி வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்” என்றார். இவர் கூறுவதைப் பார்த்தால் மே மாதம் முழுவதுமே கொரோனா தடுப்பூசி கிடைக்காது என்றே தெரிகிறது.