’கொடி பறக்குதா’… ஐநாவில் இந்தியா ராஜநடை… 3 முக்கிய அமைப்புகளுக்குத் தலைமை!

 

’கொடி பறக்குதா’… ஐநாவில் இந்தியா ராஜநடை… 3 முக்கிய அமைப்புகளுக்குத் தலைமை!

எட்டாவது முறையாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலின் மூன்று முக்கிய துணை அமைப்புகளுக்கு இந்தியா தலைமை தாங்கவிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் சக்திவாய்ந்த அமைப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் பார்க்கப்படுகிறது. உலக நாடுகளில் பயங்காரவாத மற்றும் அசாதாரண சூழல்களைத் தடுத்து அமைதியை நிலைநாட்டுவதே இந்த அமைப்பின் தலையாயக் கடமை. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன.

’கொடி பறக்குதா’… ஐநாவில் இந்தியா ராஜநடை… 3 முக்கிய அமைப்புகளுக்குத் தலைமை!

தவிர பத்து நாடுகள் தற்காலிகமான உறுப்பினராகவும் உள்ளன. இந்தத் தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் பிராந்தியங்களின் அடிப்படையில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் நடைபெறும். பிராந்தியங்களில் இருக்கும் நாடுகள், தேர்தலில் நிற்கும் நாட்டிற்கு தங்களது வாக்குகளைச் செலுத்தும்.

அந்த வகையில் இந்தாண்டு ஜூனில் நடைபெற்ற தேர்தலில் ஆசிய-பசிபிக் பிராந்திய உறுப்பினர் இடத்திற்கு இந்தியா போட்டியிட்டது. பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்ததால், இந்தியா எட்டாவது முறையாகத் தற்காலிக உறுப்பினராகியது.

’கொடி பறக்குதா’… ஐநாவில் இந்தியா ராஜநடை… 3 முக்கிய அமைப்புகளுக்குத் தலைமை!

இந்தியா ஜனவரி 2ஆம் தேதி பொறுப்பேற்றதையடுத்து 5ஆம் தேதி இந்திய தேசியக் கொடி நாட்டும் விழா நடைபெற்றது. இச்சூழலில் மூன்று முக்கியமான கமிட்டிகளுக்கு இந்தியா தலைமை தாங்கவிருப்பதாக ஐநாவுக்கான இந்திய தூதர் டிஎஸ் திருமூர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

’கொடி பறக்குதா’… ஐநாவில் இந்தியா ராஜநடை… 3 முக்கிய அமைப்புகளுக்குத் தலைமை!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ”ஐநாவில் இந்திய கொடி பறப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே மூன்று துணை அமைப்புகளுக்கு இந்தியா தலைமை தாங்கவிருப்பது பேருவகை அளிக்கிறது. தலிபான் தடுப்புக் குழு, லிபியா தடுப்புக் குழு, பயங்காரவாத எதிர்ப்புக் குழு ஆகிய மூன்று கமிட்டிகளுக்குத் தலைமையாக இந்தியா செயல்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.