இந்தியா முதலில் பேட்டிங் – InsVsAus

 

இந்தியா முதலில் பேட்டிங் – InsVsAus

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன.

கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது. அதனால், ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது இந்திய அணி.

இந்தியா முதலில் பேட்டிங் – InsVsAus

மூன்றாம் இறுதி ஒருநாள் போட்டியில் பல மாற்றங்களைச் செய்திருந்தார் கேப்டன் விராட் கோலி. அதில் தமிழக வீரர் நடராஜன் தங்கராசும் ஆடும் லெவன் அணியில் இடம்பெற்றிருந்தார். நடராஜனால் பவர் பிளேவில் சரியாக பந்து வீச முடியாது. விக்கெட் எடுக்க முடியாது என கமெண்ட்ரியில் முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கிண்டல் செய்துகொண்டிருந்தார். ஆனால், பவர் பிளேவில் ஓப்பனிங் வீரரின் விக்கெட்டையே வீழ்த்தி அசத்தினார் நடராஜன்.

இந்தியா முதலில் பேட்டிங் – InsVsAus

மூன்றாம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று, தொடர்ந்து கண்டுவரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஆஸ்திரேலியா அணியுடன் டி20 போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. அதில் 15 பேர் கொண்ட அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்கிறார். ஆனால், ஆடும் லெவன் அணியில் இடம்பிடிப்பாரா என்பதே இப்போதைய கேள்வியாக இருந்து வந்தது.

இந்தியா முதலில் பேட்டிங் – InsVsAus

இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்ய முதலில் பேட்டிங் ஆட தயாராகி வருகிறது இந்திய அணி.