பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தியது இந்தியா!

 

பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தியது இந்தியா!

இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தானின் ராணுவ ட்ரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தியது இந்தியா!

ஜம்மு-காஷ்மீர், கெரானில் இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தானின் ராணுவ ட்ரோன், இன்று காலை 8 மணி அளவில் பறந்து கொண்டிருந்துள்ளது. இதனைக் கண்ட இந்திய ராணுவ வீரர்கள், உடனே அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். சீன நிறுவனமான டி.ஜே.ஐ தயாரித்த அந்த ட்ரோன், மேவிக் 2 புரோ மாடலை சேர்ந்தது. இந்திய எல்லையை உளவு பார்க்கும் நோக்கோடு பாகிஸ்தான் அனுப்பி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தியது இந்தியா!

கடந்த சில மாதங்களுக்கு லடாக் எல்லையில் சீனா நடத்திய திடீர் தாக்குதலால், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இருந்தே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அவ்வப்போது சீன வீரர்கள் எல்லையில் அத்துமீறி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் ட்ரோன் எல்லை தாண்டியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.