எல்லையில் தொடரும் பதற்றம்…. இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ்… வருகிறது ரபேல் போர் விமானங்கள்

எல்லையில் தொடரும் பதற்றம்…. இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ்… வருகிறது ரபேல் போர் விமானங்கள்

2016ல் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதியன்று பிரான்ஸின் விமானபடை தளத்தில் முதல் ரபேல் விமானத்தை நமது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். டசால்ட் நிறுவனம் மத்திய அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 2020 மே மாத இறுதிக்குள் முதலில் 4 ரபேல் போர் விமானங்களை நம் நாட்டுக்கு டெலிவரி செய்ய வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரபேல் போர் விமானம் டெலிவரி தள்ளிபோனது.

எல்லையில் தொடரும் பதற்றம்…. இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ்… வருகிறது ரபேல் போர் விமானங்கள்

இந்த சூழ்நிலையில் ரபேல் போர் விமானத்தை சீக்கிரம் டெலிவரி செய்யும்படியும், முதலில் 6 ரபேல் போர் விமானங்களை தரும்படியும் பிரான்ஸ் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை கோரிக்கை வைத்ததாகவும், அதனை ஏற்றுக்கொண்ட டசால்ட் நிறுவனம் ரபேல் விமானங்கள் டெலிவரி நடவடிக்கையை வேகப்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை இறுதிக்குள் Meteor ஏவுகணைகளுடன் ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லையில் தொடரும் பதற்றம்…. இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ்… வருகிறது ரபேல் போர் விமானங்கள்

ஜூலை 27ம் தேதியன்று ஹரியானாவில் இருக்கும் அம்பாலா விமான படைத் தளத்தில் ரபேல் போர் விமானங்கள் தரையிறங்கும் என தெரிகிறது. Meteor ஏவுகணைகள் வானிலிருந்து வானில் 150 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனா குடைச்சல் கொடுத்து வரும் வேளையில், இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. ரபேல் போர் விமானங்கள் வருகை இந்திய விமானப்படைக்கு அசூர பலத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.