இங்கிலாந்தை பழித்தீர்க்குமா இந்தியா? இங்கிலாந்துக்கு 330 ரன்கள் இலக்கு!!

 

இங்கிலாந்தை பழித்தீர்க்குமா இந்தியா? இங்கிலாந்துக்கு 330 ரன்கள் இலக்கு!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார் , விராட் கோலி இந்த தொடரின் 3 ஆட்டத்திலும் டாஸில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.கடந்த இரண்டு ஆட்டத்தைப் போல் அல்லாமல் இந்த முறை சற்று அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 44 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அடில் ரசிட் கூகிலி பந்தின் மூலம் பிரித்தார். நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா 38 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினர்.

Image

சிறிது நேரத்தில் ஷிகர் தவான் 67 ரன்களிலும்,கோலி 7 ரன்களிலும், கே.எல் ராகுல் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதன் பிறகு அதிரடி வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடி வந்த ரிஷப் பண்ட் 44 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 60 பந்துகளை கடந்த அந்த ஜோடி 99 ரன்கள் சேர்த்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் ரிஷப் பண்ட் 4 சிக்சர்களுடன் 78 ரன்களும் ஹர்திக் பாண்டியா 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் 48.2 ஓவர்களில் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மார்க் வுட் 3 விக்கெட்களையும், அடில் ரசிட் 2 விக்கெட்டும் எடுத்தனர்.