ஒரே நாளில் அதிக கொரோனா இறப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்! – கவலையில் மக்கள்

 

ஒரே நாளில் அதிக கொரோனா இறப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்!  – கவலையில் மக்கள்

ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை கணக்கீட்டில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு சென்றிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உலக அளவில் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. பிரேசிலில் 16 லட்சம் பேருக்கு கொரோனா உள்ளது. இந்தியாவில், 7 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு கொரோனா உள்ளது.

ஒரே நாளில் அதிக கொரோனா இறப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்!  – கவலையில் மக்கள்
அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகள் பட்டியலிலும் இந்தியா முன்னேறி வருகிறது. தற்போது இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. 1.32 லட்சம் இறப்புகளுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பிரேசில், இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.
தற்போது ஒரு நாளில் அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பிரேசிலில் ஒரே நாளில் 656 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 474 பேரும், அமெரிக்காவில் 360 பேரும் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் அதிகரித்து வருவது மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.