ராமர் கோயில் கட்டுமானத்தை விமர்சித்த பாகிஸ்தான்… சிறுபான்மை குறித்து பேச வெட்கப்பட வேண்டும் என பதிலடி கொடுத்த இந்தியா..

ராமர் கோயில் கட்டுமானத்தை விமர்சித்த பாகிஸ்தான்… சிறுபான்மை குறித்து பேச வெட்கப்பட வேண்டும் என பதிலடி கொடுத்த இந்தியா..

கடந்த சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியது. இதனை பாகிஸ்தான் விமர்சனம் செய்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகமே முன்எப்போதும் இல்லாத தொற்று நோயான கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் வேளையில், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. இணை தங்களது இந்துத்துவா கொள்கையை முன்னெடுத்து வருகிறது.

ராமர் கோயில் கட்டுமானத்தை விமர்சித்த பாகிஸ்தான்… சிறுபான்மை குறித்து பேச வெட்கப்பட வேண்டும் என பதிலடி கொடுத்த இந்தியா..

2020 மே 26ம் தேதியன்று அயோத்தியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாபரி மஸஜித்தின் இடத்தில் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவது இந்த திசையின் மற்றொரு படியாகும். இதனை பாகிஸ்தான் அரசாங்கமும், மக்களும் கடுமையாக வகையில் கண்டிக்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதற்கு பாபர் மசூதி, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்முறையை தொடங்குவது தொடர்பான முன்னேற்றங்கள் போதுமானது. இவ்வாறு அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டுமானத்தை விமர்சித்த பாகிஸ்தான்… சிறுபான்மை குறித்து பேச வெட்கப்பட வேண்டும் என பதிலடி கொடுத்த இந்தியா..

இதற்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் கூறியதாவது: பாகிஸ்தானின் அபத்தமான அறிக்கையை நாம் பார்த்தோம், அதற்கு எந்த இடமும் இல்லை. சிறுபான்மையினர் குறித்து கூட குறிப்பிடுவதற்கு பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும். இந்தியா சட்டத்தின் ஆட்சியால் செயல்படும் நாடு. இது அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் நேரத்தை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள அவர்கள் சொந்த அரசியலமைப்பை படிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.