மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா…3 ஆம் அலையின் தொடக்கமா?

 

மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா…3 ஆம் அலையின் தொடக்கமா?

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா…3 ஆம் அலையின் தொடக்கமா?

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 29,689 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் இன்று மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 640 பேர் கொரோனாவால் பலியாகினர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,22,022 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவிலிருந்து குணமாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா…3 ஆம் அலையின் தொடக்கமா?

கடந்த 24 மணிநேரத்தில் 41,678 கொரோனாவிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து 3,06,63,147 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவினால் தற்போது 3,99,436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இதுவரை 44,61,56,659 பேர் செலுத்தி கொண்டனர்.