இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று 38,079 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,157 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை   3,10,64,908 லிருந்து  3,11,06,065ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 518 பேர் பலியான நிலையில் இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,13,091 லிருந்து 4,13,609 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 42,004 குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் 3,02,69,796 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். அத்துடன் தற்போது வரை 4,22,660 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதிலும் இதுவரை மொத்தம் 40,49,31,715 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரையில் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 41,99,68,590 டோஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதில் 39,42,97,344 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மாநிலங்களிடம் 2,56,71,246 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதலாக மாநிலங்களுக்கு 15,75,140 டோஸ்கள் வழங்கப்பட உள்ளன.