அதிவேகமாக பரவும் கொரோனா… ஒரேநாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு!

 

அதிவேகமாக பரவும் கொரோனா… ஒரேநாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,03,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிவேகமாக பரவும் கொரோனா… ஒரேநாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் ஊரடங்கு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா , பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாளை முதல் தமிழகத்திலும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்தது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் 4,03,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,22,96,414 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கை 2,42,362 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 37,36,648 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1,83,17,404 பேர் இதுவரை நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அதேபோல் இதுவரை கொரோனா தடுப்பூசியை 16,94,39,663 பேர் செலுத்தி கொண்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.