‘102 நாட்களுக்கு பிறகு’ 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

‘102 நாட்களுக்கு பிறகு’ 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘102 நாட்களுக்கு பிறகு’ 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே 50ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில் இந்தியாவில் 102 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று 40ஆயிரத்திற்கும் கீழ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,566 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,02,79,331 லிருந்து ஆக 3,03,16,897 உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,03,16,897ஆக அதிகரித்துள்ளது.

‘102 நாட்களுக்கு பிறகு’ 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 907 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,96,730லிருந்து 3,97637 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து ஒரேநாளில் 56,994பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,93,09,607லிருந்து 2,93,66,601 ஆக அதிகரித்துள்ளது.தற்போது 5,52,659 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.