தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா : 3வது அலை ஆரம்பமா?

 

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா : 3வது அலை ஆரம்பமா?

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,178 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா : 3வது அலை ஆரம்பமா?

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,401 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று தினசரி கொரோனா 35,178 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 530 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,33,049 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா : 3வது அலை ஆரம்பமா?

அத்துடன் 39,157 பேர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்துள்ளதால் 3,15,25,080 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,64,129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரேநாளில் 56,36,336 பேருக்கு கொரோனா டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை இந்தியாவில் 56,64,88,433 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 25 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 35,178 ஆகவும், இன்று மீண்டும் பாதிப்பு 36,401 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 440 ஆக இருந்த நிலையில், இன்று 530 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால், கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.