சற்று குறைந்த கொரோனா தொற்று…3ஆம் அலையை தடுக்குமா இந்தியா?

 

சற்று குறைந்த கொரோனா தொற்று…3ஆம் அலையை தடுக்குமா இந்தியா?

இந்தியாவில் இதுவரை 57.61 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சற்று குறைந்த கொரோனா தொற்று…3ஆம் அலையை தடுக்குமா இந்தியா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பும் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என மத்திய , மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக், அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

சற்று குறைந்த கொரோனா தொற்று…3ஆம் அலையை தடுக்குமா இந்தியா?

இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 34,457 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 36 ஆயிரத்து 401, நேற்று 36 ஆயிரத்து 571 என பதிவான நிலையில் இன்று 34 ஆயிரத்து 457 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 3 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 347 குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் ஆபத்து 375 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து தொள்ளாயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.