ஒரே நாளில் 31,382 பேருக்கு கொரோனா : 318 பேர் மரணம்!!

 

ஒரே நாளில் 31,382 பேருக்கு கொரோனா : 318  பேர் மரணம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. பால்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா மூன்றாம் அலை அடுத்த மாதம் தொடங்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உஷார் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது . இந்தியாவில் திடீரென உயரும் தினசரி கொரோனா பாதிப்பும், மரணங்களும், திடீரென குறையவும் செய்கின்றன. இதனால் மூன்றாம் அலை உருவாகும் சாத்தியம் உள்ளதா? இல்லையா ? என்பது கூட இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை மூன்றாம் அலை உருவானாலும் அது, முதல், இரண்டாம் அலை போல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் சொல்லப்படுகிறது.

ஒரே நாளில் 31,382 பேருக்கு கொரோனா : 318  பேர் மரணம்!!

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 26,964ஆகவும், நேற்று 31,923 ஆகவும் இருந்த நிலையில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அத்துடன் ஒரேநாளில் 318 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 282 பேர் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,368 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 31,382 பேருக்கு கொரோனா : 318  பேர் மரணம்!!

கடந்த 24 மணிநேரத்தில் 32,542 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை 3,28,48,273 பேர் குணமாகியுள்ளனர். அதேபோல் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,00,162 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 72,20,642 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில் இந்தியாவில் இதுவரை 84,15,18,026 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..