மீண்டும் குறையும் கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

 

மீண்டும் குறையும் கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை 47,85,44,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் குறையும் கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,16,95,958 லிருந்து 3,17,26,507 ஆக உயர்ந்து காணப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 3,16,95,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 41 ஆயிரத்து 831, நேற்று 40 ஆயிரத்து 134 என பதிவான நிலையில் இன்று 30 ஆயிரத்து 549 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் குறையும் கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு4,25,195 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில்38,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,08,96,354 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்து ஒரு எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 57 ஆயிரத்து 467 லிருந்து 3 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரத்து 354 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 4,04,958 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 61,09,587 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இதுவரை 47,85,44,114 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனவிலிருந்து குணமடைந்தோர் ஒரு விகிதம் 97.38% ; உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.