மீண்டும் குறையும் கொரோனா : 160 நாட்களில் நாட்களில் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்த பாதிப்பு!

மீண்டும் குறையும் கொரோனா : 160 நாட்களில் நாட்களில் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்த பாதிப்பு!

இந்தியாவில் ஒரேநாளில் 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் குறையும் கொரோனா : 160 நாட்களில் நாட்களில் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்த பாதிப்பு!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. இதனால் மத்திய , மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்தன. . இந்த சூழலில் கொரோனா மூன்றாவது அலை வருகின்ற அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும் என தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மீண்டும் குறையும் கொரோனா : 160 நாட்களில் நாட்களில் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்த பாதிப்பு!

இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 25,072 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக 30ஆயிரத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு இன்று 30ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 3,24,49,306 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் 389 சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கொரோனாவால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 4,34,756 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 44,157 பேர் குணமாகியுள்ளனர். இது தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை விட குறைவு. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,924 ஆக அதிகரித்துள்ளது.