நேபாளத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் வரைபடத்தை திருத்தியது! – இந்தியா எதிர்ப்பு

 

நேபாளத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் வரைபடத்தை திருத்தியது! – இந்தியா எதிர்ப்பு

நேபாளத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானும் தன்னுடைய நாட்டின் வரைபடத்தை திருத்தி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் குஜராத், காஷ்மீர், லடாக் பகுதிகள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் வரைபடத்தை திருத்தியது! – இந்தியா எதிர்ப்பு
இந்தியா தன்னுடைய எல்லைப் பகுதிகளுக்கு விரைவில் ராணுவத்தை கொண்டு செல்லும் வகையில் புதிய புதிய பாதைகளை அமைத்து வருகிறது. இந்த பாதைகள் மூலம் கைலாஷ் மானசரோவர் செல்லும் நாட்கள் எண்ணிக்கை குறைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா சாலை அமைத்த பகுதி நேபாள எல்லைக்குள் வருகிறது என்று பிரச்னை நேபாள அரசு பிரச்னையை கிளப்பியது. நேபாள நாட்டின் வரைபடத்தை திருத்தியும் அது வெளியிட்டது.

நேபாளத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் வரைபடத்தை திருத்தியது! – இந்தியா எதிர்ப்புஇந்த நிலையில் பாகிஸ்தான் அரசும் தன்னுடைய நாட்டின் எல்லையை திருத்தி வெளியிட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத், காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன. புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதலும் வழங்கியுள்ளது. இதை அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ளார்.

நேபாளத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் வரைபடத்தை திருத்தியது! – இந்தியா எதிர்ப்பு

இந்தியாவுடன் பிரச்னை செய்யும் வகையில் இந்த வரை படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் வரைபடம் என்ற பெயரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்ட வரைபடத்தை பார்த்தோம். இது அபத்தமான நடவடிக்கை. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளுக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளது. வலிமையான பிரதமர் ஆட்சி செய்யும் இந்தியாவில் சின்ன சின்ன நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக வாலாட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.