கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறக்க தயார்… பாகிஸ்தானின் உள்குத்து கோரிக்கையை நிராகரித்த இந்தியா…

 

கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறக்க தயார்… பாகிஸ்தானின் உள்குத்து கோரிக்கையை நிராகரித்த இந்தியா…

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் தனது வாழ்நாளின் கடைசி 18 ஆண்டுகளை தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரிலுள்ள குருத்வாராவில்தான் கழித்தார். அதனால் கர்தார்பூரிலுள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் சீக்கிய மக்கள் மத்தியில் முக்கியமான புனிதத் தலமாக கருதப்படுகிறது. நம் நாட்டிலுள்ள தேரா பாபாநானக் குருத்வாராவிலிருந்து 4 கி.மீட்டர் தொலைவில்தான் கர்தார்பூர் குருத்வாரா உள்ளது. ஆனால் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது கர்தார்பூர் பாகிஸ்தான் பகுதிக்கு சென்று விட்டதால் அங்குள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்களால் செல்ல முடியாமல் இருந்தது.

கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறக்க தயார்… பாகிஸ்தானின் உள்குத்து கோரிக்கையை நிராகரித்த இந்தியா…

இந்நிலையில் 2018 செப்டம்பரில், தேரா பாபாநானக் குருத்வாராவுக்கும் கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்க இந்தியாவும்,பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன. இதனையடுத்து இருநாடுகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டது. இதனையடுத்து சீக்கியர்கள் கர்தார்பூர் குருத்வாரா சென்று வந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி முதல் தற்காலிகமாக கர்தார்பூர் வழித்தடம் மூடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மகாராஜா ரஞ்சித் சிங் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.

கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறக்க தயார்… பாகிஸ்தானின் உள்குத்து கோரிக்கையை நிராகரித்த இந்தியா…

ஆனால், கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்லை தாண்டிய பயணம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தை கூறி பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. மேலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை நல்லெண்ணத்தின் மாயை என்றும், 2 நாளில் பாதையை திறந்து விடுகிறோம் என்று கூறுவது இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மதிப்பை குறைப்பதாகும். பயணம் செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக பயணிகளின் விவரங்களை இருநாடுகளும் பரிமாறிகொள்ள வேண்டும் என்பது ஒப்பந்த விதிமுறை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.