20 லட்சம் தடுப்பூசிகள்: பங்களாதேஷிடிற்கு இலவசமாக வழங்கும் இந்தியா!

 

20 லட்சம் தடுப்பூசிகள்: பங்களாதேஷிடிற்கு இலவசமாக வழங்கும் இந்தியா!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸுக்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டன. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை நாடுகளுக்கிடையே பகிர்ந்துகொள்வதில் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கவலை தெரிவித்திருந்தார். அதிக வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு கோடிக்கணக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மருந்துகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

20 லட்சம் தடுப்பூசிகள்: பங்களாதேஷிடிற்கு இலவசமாக வழங்கும் இந்தியா!

இந்த நிலையில், பங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க இந்தியா ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய பங்களாதேஷ் சுகாதாரத்துறை அமைச்சர், ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரோஜெனகா தடுப்பூசிகளை பங்களாதேஷிடிற்கு வழங்க இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது. அவை புதன்கிழமை விமானத்தில் தாகா வரவிருக்கிறது. பின்னர் அவை பங்களாதேஷ் இடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

20 லட்சம் தடுப்பூசிகள்: பங்களாதேஷிடிற்கு இலவசமாக வழங்கும் இந்தியா!

இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் பங்களாதேஷ் சுகாதாரத் துறை சேவை இயக்குனரகம் இதனை உறுதி செய்துள்ளது. வரும் 20ஆம் தேதி, அதாவது நாளை இந்தியாவில் இருந்து 20 லட்சம் தடுப்பூசிகள் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்திருக்கிறது.