அபாயகரமான ‘ரெட்’ லிஸ்டில் இந்தியா – அதிரடி முடிவு எடுத்த பிரிட்டன்!

 

அபாயகரமான ‘ரெட்’ லிஸ்டில் இந்தியா – அதிரடி முடிவு எடுத்த பிரிட்டன்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் எத்தனை வீரியமாக இருக்கிறது என்பதைக் கடந்த 10 நாட்களாக நாடு கண்டுவருகிறது. நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடிக்கொண்டே இருக்கிறது. உபி, குஜராத் ஆகிய மாநிலங்களில் சடலங்களை நடைபாதையில் போட்டு எரிக்கும் அவலங்களும் ஏற்பட்டுள்ளன.

அபாயகரமான ‘ரெட்’ லிஸ்டில் இந்தியா – அதிரடி முடிவு எடுத்த பிரிட்டன்!

இவையனைத்திற்கும் இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்று அணுமானிக்கின்றனர் ஆய்வாளர்கள். உயிரியல் பரிணாமப்படி அனைத்து வைரஸ்களும் இவ்வாறு உருமாறுவது இயல்பு. அப்படி மாறும்போது சில வைரஸ்களின் தீவிரம் குறையும் அல்லது முன்பை விட வீரியமாக இருக்கும். தற்போது இந்தியாவில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய வைரஸ் பயங்கர வீரியத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மீண்டுமொரு லாக்டவுன் போட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே தப்பிக்க முடியும் என்கின்றனர்.

அபாயகரமான ‘ரெட்’ லிஸ்டில் இந்தியா – அதிரடி முடிவு எடுத்த பிரிட்டன்!

புதிய வைரஸின் தீவிரத்தை உணர்ந்து தான் பிரிட்டன் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. வங்க தேசம், பாகிஸ்தானுடன் சேர்த்து இந்தியாவையும் ரெட் லிஸ்ட் எனப்படும் அபாயகரமான நாடுகளில் பட்டியலில் இணைத்துள்ளது. தொடர்ந்து இந்தியாவிலிருந்து யாரும் பிரிட்டன் வரக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருக்கும் பிரிட்டன் குடிமக்கள் மட்டும் நாட்டிற்குத் திரும்பலாம். பிரிட்டன் வந்த பிறகு 11 நாட்கள் அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான ‘ரெட்’ லிஸ்டில் இந்தியா – அதிரடி முடிவு எடுத்த பிரிட்டன்!

அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகையும் ரத்து செய்யப்பட்டது. சென்ற வருடம் குடியரசுத் தினத்திற்கு வருகை தருவதாக இருந்தது. கொரோனா பரவலைக் காரணம் காட்டில் அப்போது ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்தாகியிருக்கிறது. தற்போது அமெரிக்காவும் இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்திருக்கிறது. ஏற்கெனவே ஹாங்காங் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.