இந்தியாவுக்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு தேவை! – நிதின்கட்கரி கவலை

 

இந்தியாவுக்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு தேவை! – நிதின்கட்கரி கவலை

இந்தியாவுக்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு தேவை! – நிதின்கட்கரி கவலை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்க ரூ.60 லட்சம் கோடி அளவுக்கு அந்நிய முதலீடு தேவைப்படுகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு தேவை! – நிதின்கட்கரி கவலைமத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா பொருளாதாரத்துக்கு ரூ.50 முதல் 60 லட்சம் கோடி வெளிநாட்டு நேரடி முதலீடு தேவைப்படுகிறது. இந்த முதலீடு கிடைத்தால் கட்டமைப்பை உருவாக்கும் துறைகள் மற்றும் சிறு மற்றும் குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்.

இந்தியாவுக்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு தேவை! – நிதின்கட்கரி கவலைதற்போதைய சூழலில் அந்திய நேரடி முதலீடு மிக அவசியம். பணம் முதலீடு நடக்கவில்லை என்றால் இந்தியப் பொருளாதார சக்கரம் சுழலாது. இந்திய பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட இந்த அந்நிய நேரடி முதலீடு தேவை. நெடுஞ்சாலைகள், விமான போக்குவரத்து, உள்நாட்டு நீர் வழிப்பாதை, ரயில்வே, சரக்குகள் கையாளுதல், சிறு, நடுத்தர, குறு தொழில்களுக்கு இந்த முதலீடு தேவை.
ஏற்றுமதியை அதிகரிக்க நமது தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது.

இந்தியாவுக்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு தேவை! – நிதின்கட்கரி கவலைநம்முடைய பிரதமரும் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வலியுறுத்தி வருகிறார். இதற்கு இந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன. உலகமே மிகப்பெரிய பாதிப்பில் உள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் இந்தியா தன்னுடைய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம்” என்றார்.
இந்தியா சுய சார்போடு நிற்க கூட, வெளிநாட்டு முதலீடு வர வேண்டும் என்று அமைச்சர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.