சில்லான வானிலையில் சூடான ஆட்டம்: கோட்டுக்கு அந்தப் பக்கம் போனா மேட்ச் இந்தியா கையில… இந்தப் பக்கம் போனா ஆஸி. கையில!

சில்லான வானிலையில் சூடான ஆட்டம்: கோட்டுக்கு அந்தப் பக்கம் போனா மேட்ச் இந்தியா கையில… இந்தப் பக்கம் போனா ஆஸி. கையில!

கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வெற்றிபெற 10 விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டும். இந்தியா வெற்றிபெற 324 ரன்கள் வேண்டும். பார்டர்-கவாஸ்கர் தொடரின் கிளைமேக்ஸ் வந்துவிட்டது. குளிர்ச்சியான வானிலையில் சூடான ஆட்டத்தை நாளை கண்டுகளிக்கலாம்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் காயமடைந்ததால் நடராஜன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். தாகூரை தவிர்த்து மற்ற இருவருக்கும் இது அறிமுக போட்டி.

சில்லான வானிலையில் சூடான ஆட்டம்: கோட்டுக்கு அந்தப் பக்கம் போனா மேட்ச் இந்தியா கையில… இந்தப் பக்கம் போனா ஆஸி. கையில!

ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் ஆட வந்தது. வழக்கம் போல தொடக்க வீரர்களான வார்னமும் மார்கஸ் ஹாரிஸும் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். ஸ்மித்தும் சோபிக்க தவறினார். ஆனால் லபுஷானே சிறப்பாக விளையாடி சதத்தைப் பூர்த்தி செய்தார். அதன்பின் கிரீன், பெய்ன் உதவியுடன் 300 ரன்களைக் கடந்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமில்லை இந்தியாவுக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 60 ரன்களுக்கு இரு தொடக்க வீரர்களும் பெவிலியன் திரும்பினர். நடுவரிசை வீரர்களாவது அணியை மீட்பார்களா என்று பார்த்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

சில்லான வானிலையில் சூடான ஆட்டம்: கோட்டுக்கு அந்தப் பக்கம் போனா மேட்ச் இந்தியா கையில… இந்தப் பக்கம் போனா ஆஸி. கையில!

பண்ட் அவுட்டானதும் அவ்வளவு தான் ஆட்டம் முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸ்திரேலியாவை திணறவைத்தது தாகூர்-சுந்தர் கூட்டணி. இருவரும் அரை சதத்தைக் கடந்து அணியின் ஸ்கோரை 300 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். இறுதியில் 336 ரன்களுக்கு இந்தியா மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது.

34 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது வார்னர்-ஹாரிஸ் ஜோடி. அதன்பின் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகினர். போன இன்னிங்ஸில் சதமடித்த லபுஷானே 25 ரன்களில் அவுட்டாக, வந்த வேகத்தில் மேத்யூ வேட் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார். ஸ்மித் மட்டும் அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

சில்லான வானிலையில் சூடான ஆட்டம்: கோட்டுக்கு அந்தப் பக்கம் போனா மேட்ச் இந்தியா கையில… இந்தப் பக்கம் போனா ஆஸி. கையில!

நடுவரிசை வீரர்கள் பெரிதாய் ரன் அடிக்கவில்லை என்பதால் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவிற்கு இலக்காக 328 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித் சர்மாவும் கில்லும் களமிறங்கி ஆடிக்கொண்டிருக்கும்போதே வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போல மழை குறுக்கிட்டது.

இன்றைய நாளின் எஞ்சிய ஓவர்களை விளையாட முடியாத அளவுக்கு மழை வெளுத்துவாங்குகிறது. தற்போது இந்தியா 1.5 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா ஜெயிக்க 324 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா ஜெயிக்க 10 விக்கெட்டுகள் தேவை. ஒருவேளை இந்தியா ஆட்டத்தை டிரா செய்து கோப்பையைத் தக்கவைக்க வேண்டுமென்றால் 98 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும்.

சில்லான வானிலையில் சூடான ஆட்டம்: கோட்டுக்கு அந்தப் பக்கம் போனா மேட்ச் இந்தியா கையில… இந்தப் பக்கம் போனா ஆஸி. கையில!

நாளைய ஆட்டத்தை வானிலை தீர்மானிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கடந்த இரு போட்டிகளிலும் மாயஜாலம் நிகழ்த்திய இந்திய அணி நாளை என்ன செய்யப் போகிறது என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

சில்லான வானிலையில் சூடான ஆட்டம்: கோட்டுக்கு அந்தப் பக்கம் போனா மேட்ச் இந்தியா கையில… இந்தப் பக்கம் போனா ஆஸி. கையில!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது போல் இந்திய அணி வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாளைய வெற்றி வெறும் வெற்றியல்ல சரித்திரம். சரித்திரம் படைக்குமா இந்திய அணி?