வாயை கொடுத்து வாங்கி கட்டிய இம்ரான் கான்… வெளிப்படையாக கிண்டல் அடித்த இந்திய அதிகாரி

 

வாயை கொடுத்து வாங்கி கட்டிய இம்ரான் கான்… வெளிப்படையாக கிண்டல் அடித்த இந்திய அதிகாரி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில், எங்கள் அரசு ஏழைகள் மீதான கோவிட்-19 வீழ்ச்சியை சமாளிக்க வெளிப்படையான முறையில் 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு 9 வாரங்களில் ரூ.12,000 கோடியை வெற்றிகரமாக பரிமாற்றம் செய்தோம். இந்தியா முழுவதுமாக 34 சதவீத குடும்பங்களுக்கு கூடுதல் உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் வாழ முடியாது. உதவியை வழங்கவும், அதன் அணுகல் மற்றும் வெளிப்படைதன்மைக்காக சர்வதேச அளவில் பாராட்டை பெற்ற எங்களது வெற்றிகரமான பண பரிமாற்ற திட்டத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளேன் என பதிவு செய்து இருந்தார்.

வாயை கொடுத்து வாங்கி கட்டிய இம்ரான் கான்… வெளிப்படையாக கிண்டல் அடித்த இந்திய அதிகாரி

தேவையில்லாமல் வார்த்தையை விட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமூக ஊடகங்களில் கடுமையாக கிண்டல் அடிக்கப்பட்டார். மேலும் வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா வெளிப்படையாக விமர்சித்து கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் கடன் பிரச்சினை பற்றி அனைவருக்கும் தெரியும்.

வாயை கொடுத்து வாங்கி கட்டிய இம்ரான் கான்… வெளிப்படையாக கிண்டல் அடித்த இந்திய அதிகாரி

பாகிஸ்தானின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவீதமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவீதத்தை உள்ளடக்கிய கடன் பிரச்சினை பாகிஸ்தான் நினைவு கூர்வது நல்லது. இதுவரை இந்தியா சென்றதில், எங்களது நிதிதொகுப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை போலவே பெரியது. பாகிஸ்தான் தனது சொந்த மக்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்வதை காட்டிலும் நாட்டுக்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்வதில் பெயர் போனது. இம்ரானுக்கு புதிய ஆலோசகர்கள் மற்றும் சிறந்த தகவல்கள் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.