41 ஆண்டுகளுக்கு பின்… பதக்கம் வென்று சரித்திரம் படைத்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

 

41 ஆண்டுகளுக்கு பின்… பதக்கம் வென்று சரித்திரம் படைத்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

1980க்கு பிறகு ஆடவர் ஹாக்கியில் பதக்கம் வென்று சாதித்த இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கதிற்கான போட்டி இன்று காலை தொடங்கியது ஜெர்மனியை எதிர்த்து இந்திய அணி களம் இறங்கியது. ஆட்டம் தொடங்கி 2 நிமிடத்திலேயே ஒரு கோல் அடித்து ஜெர்மனி முன்னிலைக்கு வந்தது. இரண்டாவது கால் ஆட்டத்தில் ஜெர்மனி அணியை இந்திய அணி ஆட்டம் காண வைத்தது. இறுதி வரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெண்கல பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது.

41 ஆண்டுகளுக்கு பின்… பதக்கம் வென்று சரித்திரம் படைத்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி பதக்கம் வென்றது. அதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் ஹாக்கி அணி 12 ஆவது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளது ஹாக்கி அணி.

ஜெர்மனியை துவம்சம் செய்து இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுக்கு பிறகு பதக்கத்தை கைப்பற்றியதால் இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.