ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டி: பெல்ஜியத்திடம் போராடி இந்திய அணி தோல்வி!

 

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டி: பெல்ஜியத்திடம் போராடி இந்திய அணி தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் தோல்வியை தழுவியது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஹாக்கி போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை எதிர்த்து களமிறங்கியது. முதல் காலிறுதியில் இந்தியா 2 -1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பிறகு, இரண்டாவது கால் இறுதி முடிவில் இரண்டு அணிகளும் 2 -2 கோல்களுடன் சமநிலையில் இருந்தனர்.

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டி: பெல்ஜியத்திடம் போராடி இந்திய அணி தோல்வி!

இதைத் தொடர்ந்து, இந்திய அணி அதிரடியாக விளையாடியும் பெல்ஜியம் அணி கோல் அடிக்க விடாமல் வீரர்களை தடுத்தது. போட்டியின் இறுதியில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்த பெல்ஜியம் அணி 5 -2 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கடைசி வரை அதிரடியாக விளையாடிய இந்திய அணி பெல்ஜியத்திடம் போராடி தோல்வியை தழுவியது. எனினும், இந்திய அணிக்கு வெண்கலப் பதக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், வெற்றி தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதி. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்களால் முடிந்ததை வழங்கியது. அதுவே முக்கியம். அடுத்த போட்டி மற்றும் அவர்கள் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள். இந்தியா எங்கள் வீரர்களை நினைத்துப் பெருமை கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார்.