முதன்முறையாக அரையிறுதிக்கு சென்றும் பலனில்லை… இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி!

 

முதன்முறையாக அரையிறுதிக்கு சென்றும் பலனில்லை… இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி!

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதன்முறையாக அரையிறுதிக்குள் சென்றது. அதேபோல 41 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காலிறுதிக்குள் நுழைந்திருந்தது. இதற்கு முன்னதாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி அறிமுகமாகியபோது காலிறுதிக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பல்வேறு பெருமைகளுடன் அரையிறுதிக்குள் மகளிர் அணி காலடி எடுத்து வைத்தது. ஆனால் அரையிறுதியில் மிகப்பெரிய சவால் காத்திருந்தது.

முதன்முறையாக அரையிறுதிக்கு சென்றும் பலனில்லை… இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி!

ஏனெனில் உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் பலம்வாய்ந்த அர்ஜென்டினா தான் எதிரணியாக வந்தது. இந்தியாவோ 9ஆவது இடத்தில் இருந்தது. இதனால் இந்தப் போட்டி இந்தியாவிற்கு மிக மிக கடினமான போட்டியாகவே அமையும் என சொல்லப்பட்டது. ஆனால் நினைத்தை விட கடினமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். முதல் காலிறுதியில் குர்ஜித் சிங் கோல் அடிக்க இந்தியா முன்னிலை பெற்றது. அடுத்தடுத்து கோல் அடித்து இந்தியா முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டாவது காலிறுதியில் அர்ஜென்டினா பதிலடி கோலை அடிக்க 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. அடுத்த கோல் யார் அடிக்க போகிறார்கள் என பரபரப்பாக ஆட்டம் செல்ல மூன்றாவது காலிறுதியில் அடுத்த கோலையும் அர்ஜென்டினா போட்டுத் தாக்கியது. அதற்குப் பின் பதில் தாக்குதலுக்கு இந்திய வீராங்கனைகள் போராடியும் அர்ஜென்டினா அற்புதமாக தடுத்து ஆட்டத்தை வென்றது. அரையிறுதிப் போட்டியில் தோற்றதால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டனை எதிர்கொள்கிறது. பிரிட்டன் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.