100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா – மோசமாக ஆடும் வீரர்கள் #AUSvIND

100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா – மோசமாக ஆடும் வீரர்கள்  #AUSvIND

ஆஸ்திரேலியா – இந்தியா தொடரில் முதன் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்தார். அதன்படி ஓப்பனிங் வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரும் இறங்கினர். இருவரும் மிக நிதானமாக ஆடினர்.

100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா – மோசமாக ஆடும் வீரர்கள்  #AUSvIND

27.5 ஓவரில் முகம்மது ஷமி வீசிய பந்தில் அவுட்டானார் டேவிட் வார்னர். அவர் 76 பந்துகளில் 69 ரன்களை அடித்திருந்தார். அதில் 6 பவுண்ட்ரிகள் அடங்கும். அடுத்து களம் இறங்கியிருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். இருவரும் இந்திய பவுலர்களின் பந்துகளைப் பதம் பார்த்தார்கள். அடுத்து கேப்டன் ஆரோன் பின்ச் சதம் அடித்தார். 124 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.

அடுத்து ஆடிய ஸ்மித்தும் சதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 374 ஆக உயர்ந்தது.

100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா – மோசமாக ஆடும் வீரர்கள்  #AUSvIND

375 ரன்கள் எனும் இமாலய ஸ்கோரை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய வீரர்கள் மயங் அகர்வால் 22, கோலி 21, ஸ்ரேயாஸ் 2, கே.எல். ராகுல் 12 என சொற்ப ரன்களில் அவுட்டகி 100 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளைப் பறிக்கொடுத்திருக்கிறது.

தவான் மற்றும் பாண்டியா ஆடி வருகிறார்கள். இன்னும் அடித்து ஜடேஜா மட்டுமே உள்ளார். தோல்வியைத் தவிர்க்க தவான் – பாண்டியா ஜோடி நல்ல பார்டனர்ஷிப்பை கொடுக்க வேண்டும்.