2021- பிப்ரவரி இறுதியில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்! 20-60 கோடி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!!

 

2021- பிப்ரவரி இறுதியில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்! 20-60 கோடி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!!

உலகம் முழுவதும் கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. பல தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தோல்வியில் முடிந்த நிலையில், இந்தியாவின் பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்து நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய தொடங்கியுள்ளனர்.

கொரோனாவுக்கு விரைவில் வீரியமான தடுப்பூசி உருவாக்கப்பட வேண்டும். அதை செய்ய தவறினால், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் தினமும், 2.87 லட்சம் புதிய கொரோனா தொற்று நோயாளிகள் உருவாகக்கூடும் என அமெரிக்காவிலுள்ள, எம்.ஐ.டி., பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுலோன் மேலாண்மை கல்லுாரியின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். தொற்று ஏற்பட்டுள்ளோர், தினமும் கொரோனா சோதனை செய்து கொள்வோர், சிகிச்சையில் இருப்போர், குணமாகி வீடு திரும்பியோர் ஆகியோரின் எண்ணிக்கைகளின் அடிப்படையில், 84 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்த ஆய்வை சுலோன் ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்ந்து உள்ளனர்.

2021- பிப்ரவரி இறுதியில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்! 20-60 கோடி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!!

அதன்படி பிப்ரவரி, 2021 இறுதியில் உலகிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கும். அந்த நேரத்தில், தினமும், 95 ஆயிரம் கொரோனா நோயாளிகளுடன் அமெரிக்கா இரண்டாமிடத்திலும், தென்னாப்ரிக்கா, 21 ஆயிரம் நோயாளிகளுடன் மூன்றாமிடத்திலும், ஈரான், 17 ஆயிரம் நோயாளிகளுடன் நான்காமிடத்திலும் இருக்கும் என, ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். விரைவான, உரிய சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மக்களுக்கு வழங்கப்படாவிட்டால், 2021 மார்ச், -மே காலகட்டத்தில், உலக மக்கள் தொகையில், 20 கோடி முதல், 60 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.