“என்ன கொடி பறக்குதா?” – லார்ட்ஸ் வரலாற்று வெற்றியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா நம்பர் 1!

 

“என்ன கொடி பறக்குதா?” – லார்ட்ஸ் வரலாற்று வெற்றியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா நம்பர் 1!

ஐசிசி முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கென்று தனி முக்கியவத்துவம் கொடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை உருவாக்கியது. இந்தத் தொடர் 2019ஆம் ஆண்டு தொடங்கியது. கொரொனா தாக்கத்தால் போட்டிகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து 85 சதவிகித போட்டிகளை மட்டுமே நடத்த முடியும் என்பதால், கொரோனாவால் நடத்தமுடியாமல் போன தொடர்களுக்கு டிராவுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இப்படி ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளைக் கடந்தே இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் நியூஸிலாந்தும் தகுதிபெற்றன. இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

“என்ன கொடி பறக்குதா?” – லார்ட்ஸ் வரலாற்று வெற்றியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா நம்பர் 1!

இந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்த ஐசிசி திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு கோப்பை வாய்ப்பு கைநழுவிப் போனதற்கு புள்ளி கணக்கிடும் முறையே காரணமாகக் கூறப்பட்டது. இதனால் விதிகளை மாற்ற ஐசிசி கவுன்சில் ஆலோசனை செய்துவந்தது. பழைய விதிகளை மாற்றியமைத்து புதிய விதிகளை வகுத்தது. அதன்படி ஒரு அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி டையில் முடிந்தால், 6 புள்ளிகளும், சமனில் முடிந்தால் 4 புள்ளிகளும் வழங்கப்படும். எத்தனை போட்டிகள் கொண்ட தொடரோ அதற்கேற்ப புள்ளிகள் பிரிக்கப்படும்.

“என்ன கொடி பறக்குதா?” – லார்ட்ஸ் வரலாற்று வெற்றியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா நம்பர் 1!

2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் இம்முறையே பின்பற்றப்படும் என்று கூறப்பட்டது. தற்போது இந்தப் புள்ளி கணக்கீட்டின் படி 14 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 2ஆம் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியே இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான போட்டி தான். இந்த இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றி ஒன்றில் டிரா என 16 புள்ளிகள் கிடைத்தது. ஆனால் ஸ்லோ ரன் ரேட் அடிப்படையில் 2 புள்ளிகள் பெனால்டியாக குறைக்கப்பட்டு 14 புள்ளிகள் கிடைத்து முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தலா 1 வெற்றியைப் பதிவுசெய்து பாகிஸ்தானும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உள்ளன.