50 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த இரண்டாம் நாடு இந்தியா

 

50 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த இரண்டாம் நாடு இந்தியா

உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது பெரும் ஆபத்தான சூழல்.

செப்டம்பர் 16-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

50 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த இரண்டாம் நாடு இந்தியா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 72 லட்சத்து  14 ஆயிரத்து 20 பேர்.    

 கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 38 ஆயிரத்து 366 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

50 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த இரண்டாம் நாடு இந்தியா

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 67,88,197 பேரும், இந்தியாவில் 50,20,360 பேரும், பிரேசில் நாட்டில்  43,84,299 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுவரை 50 லட்சம் பாதிப்பை அமெரிக்கா மட்டுமே அடைந்திருந்தது. தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.

 இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

50 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த இரண்டாம் நாடு இந்தியா

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய நோயாளிகளாக 90,123 பேர் அதிகரித்திருக்கின்றார்க்ளா. 1290 பேர் இறந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணம் அடைபவர்களின் சதவிகிதம் 78 –யைத் தொட்டிருப்பதும், இறப்பு விகிதம் இரண்டுக்கும் குறைவாக இருப்பதும் ஆறுதல் அளிப்பதே. ஆனால், தினமும் 90 ஆயிரம் எனும் அளவுக்கு புதிய நோயாளிகள் அதிகரிப்பது ஆபத்தானது.