சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை…. டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா

 

சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை…. டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா

சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையின் டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு இந்த ஆண்டுக்கான உலக நாடுகளின் சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையின் டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா 48வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது கண்டுபிடிப்புத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை…. டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா
உலக கண்டுபிடிப்பு குறியீடு 2020

சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை பட்டியலில் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. சர்வதேச அளவில் கண்டுபிடிப்பு பட்டியலில் இந்தியா 48வது இடத்துக்கு முன்னேறி உள்ள அதேவேளையில், மத்திய-தெற்காசியாவில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது.

சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை…. டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு

கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் நிலையான முன்னேற்றத்தை நம் காட்டியுள்ளதால், மத்திய மற்றும் தெற்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் 2019ன் முன்னணி கண்டுபிடிப்பு சாதனையாளர்களில் ஒருவராக இந்தியாவை சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை பட்டியலில் 2015ம் ஆண்டு இந்தியா 81வது இடத்தில் இருந்தது. 2019ம் ஆண்டு 52வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.