உலகளவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் – ஐநா அறிக்கை

 

உலகளவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் – ஐநா அறிக்கை

இந்தியா மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது உலகளவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் என ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை கூறியுள்ளது.

1.80 கோடி இந்தியர்கள் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருக்கின்றனர். இதனை ஐநா மக்கள்தொகை பிரிவில் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை இயக்குநர் ஜான் வில்மோத் கூறியுள்ளார்.

உலகளவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் – ஐநா அறிக்கை

2020ஆம் ஆண்டு வெளியான சர்வதேச புலம்பெயர்வு அறிக்கையின்படி, 5.1 கோடி புலம்பெயர்ந்தோரைக் கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இது உலக மக்கள்தொகையில் 18 சதவிகிதம்.

இந்த அறிக்கையில், 2000-2020 இடைப்பட்ட காலக்கட்டத்தில் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து 1 கோடி பேர் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உலகளவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் – ஐநா அறிக்கை

இதுதொடர்பாக ஐநா மக்கள்தொகை பிரிவின் விவகார அதிகாரி கிளோர் மெனோஸ்ஸி, “உலகின் அனைத்து கண்டங்களுக்கும், அங்குள்ள அனைத்து பிராந்தியங்களிலும் இந்தியர்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர். குறிப்பாக, தொழிலாளிகள், மாணவர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாகப் புலம்பெயர்ந்தவர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இவர்களால் அந்தந்த நாடுகளில் கணிசமான அளவில் பொருளாதாரம் ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, வளைகுடா நாடுகள், கனடா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரந்து காணப்படுகின்றனர்.

உலகளவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் – ஐநா அறிக்கை

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவில் பிறந்தவர்கள் உயர்ந்த கல்வித் திறனைக் கொண்டிருக்கிறார்கள். அந்நாட்டில் உயரிய பதவிகளிலும் அங்கம் வகிக்கிறார்கள்” என்றார்.