இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளனர்… மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளனர்… மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாட்டிலுள்ள பிச்சைக்காரர்கள் குறித்து உறுப்பினர் கேட்டு இருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை தவார் சந்த் கெலாட் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளனர்… மத்திய அரசு தகவல்
தவார் சந்த் கெலாட்

மொத்த பிச்சைக்காரர்களில் 2.21 லட்சம் பேர் ஆண்கள், 1.91 லட்சம் பேர் பெண்கள். நம் நாட்டில் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக பிச்சைகாரர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 81,224 பிச்சைக்காரர்கள் உள்ளனர். அடுத்து உத்தர பிரதேசம் (65,835), ஆந்திர பிரதேசம் (30,218), பீகார் (29,723), மத்திய பிரதேசம் (28,695), ராஜஸ்தான் (25,853) மற்றும் டெல்லி (2,187) ஆகிய மாநிலங்களிலும் பிச்சைக்காரர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளனர்… மத்திய அரசு தகவல்
மாநிலங்களவை

சண்டிகரில் 121 பிச்சைக்காரர்கள் உள்ளனர். நாட்டில் மிகவும் குறைவாக லட்சத்தீவில் 2 பிச்சைக்காரர்கள் உள்ளனர். அதேவேளையில், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டியு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முறையே 19,22 மற்றும் 56 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இந்த தகவல்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் பல ஆண்டுகளுக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது.