”செப்டம்பரில் 8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி 0.8 % சரிவு”

”செப்டம்பரில் 8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி 0.8 % சரிவு”

கடந்த செப்டம்பரில் எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 0.8 சதவீதம் சரிந்துள்ளது.

”செப்டம்பரில் 8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி 0.8 % சரிவு”

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், ஸ்டீல், சிமெண்ட், உரம் மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் எட்டு முக்கிய தொழில்துறைகளாக பார்க்கப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்பட்டு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பரில் இந்த எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 0.8 சதவீதம் குறைந்திருப்பது .தெரியவந்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் 5.1 சதவீதமாக சரிந்திருந்தது.

”செப்டம்பரில் 8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி 0.8 % சரிவு”

இதனிடையே இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் உற்பத்தி குறைவே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக நிலக்கரி, மின்சாரம் மற்றும் ஸ்டீல் தவிர மற்ற ஐந்து தொழில்துறைகளும் உற்பத்தி சரிவை கண்டுள்ளதும் அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

”செப்டம்பரில் 8 முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி 0.8 % சரிவு”

இது ஒரு புறமிருக்க கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் நாட்டின் முக்கிய 8 தொழில்துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி 14.9 சதவீதம் சரிந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 1.3 சதவீத வளர்ச்சியை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்