கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

 

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . கடந்த 24 மணிநேரத்தில் 24,759 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் 500 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவி வரும் நிலையில், மகாராஷ்ரா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் அளவு 63 புள்ளி 02 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம், 19 மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் 2 புள்ளி 64 ஆக உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 30 மாநிலங்களில் தேசிய சராசரியை விட உயிரிழந்தோர் விகிதம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் ஆயிரத்து 200 மையங்களில் கொரோனா சோதனை செய்யப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.