10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

 

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. ஆரம்பக் கட்டத்தில் இருந்ததை போல் அல்லாமல், நாளொன்றுக்கு கொரோனா உறுதியாகும் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குள்ளாகவே இருந்து வருகிறது. அதே போல, கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 78 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், இதுவரை 62.59 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,110 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,43,625 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,43,625 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 10 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில், இன்று குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.