கொரோனா வைரஸுக்கு இதுவரை 1.52 லட்சம் பேர் மரணம்!

 

கொரோனா வைரஸுக்கு இதுவரை 1.52 லட்சம் பேர் மரணம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.52 லட்சமாக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு இதுவரை 1.52 லட்சம் பேர் மரணம்!

கொரோனா வைரஸுக்கு எதிரான 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. நேற்று முதல் நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 52 பேருக்கு பக்க விளைவுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாகவே, பல இடங்களில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சம் கட்டியதால் தடுப்பூசி போடும் பணி தாமதம் ஆனது. திட்டமிடப்பட்ட இலக்கை விட மிக குறைந்த அளவிலேயே நேற்று தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கோவாக்சின் மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை நடத்தப்படாதது குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

கொரோனா வைரஸுக்கு இதுவரை 1.52 லட்சம் பேர் மரணம்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 15,144 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒரே நாளில் 181 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,52,274 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த கொரோனா பாதிப்பு 1,05,57,985 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 2,08,826 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.