70 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

 

70 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவையே புரட்டி போட்டுவிட்டது. இரண்டாம் அலை இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்கூட்டியே தெரியாததால், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர், அந்தந்த மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை முடுக்கிவிட்டன. நிதி திரட்டி மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தின. நோயாளிகளை குறைந்த பாதிப்பு முதல் அதிக பாதிப்பு வாரியாக பிரித்து சிகிச்சை அளிக்க வசதிகளை ஏற்படுத்தின. இதன் விளைவாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

70 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 3921 பேர் பலியானதாகவும் 1,19,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,73,158 ஆக குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 3,74,305 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 84 ஆயிரம், நேற்று 81 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 70 ஆயிரமாக குறைந்துள்ளது. தொடர்ச்சியாக 7 நாட்களாக பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.