கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81,466 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவியதைப் போலவே, அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பாதிப்புகள் பதிவாகிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில், அந்தந்த மாநில அரசுகள் இரவு நேர லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தியிருக்கின்றன. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் பன்மடங்கு அதிகரித்த வண்ணமே உள்ளது.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 81,466 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,23,03,131 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 469 பேர் உயிரிழந்ததாகவும் 50,356 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் 6,14,696 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 முதல் 60 ஆயிரத்துக்குள்ளாகவே இருந்தது. உயிரிழப்புகளும் 300க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 80 ஆயிரத்தை எட்டியதோடு உயிரிழப்புகளும் 450க்கு மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.