இந்தியாவில் 48.46 லட்சம் பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,136 பேர் பலி!

 

இந்தியாவில் 48.46 லட்சம் பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,136 பேர் பலி!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வருபவர்களுக்கும் மறுபரிசோதனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதாவது, ரேபிட் கிட் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தும் கொரோனா அறிகுறி இருந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. அதன் படி, எல்லா மாநிலங்களிலும் அதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 48.46 லட்சம் பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 1,136 பேர் பலி!

இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 48,46,424 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,136 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 79,722 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37.80 லட்சம் ஆக அதிகரித்ததால் தற்போது 9.86 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.65% ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 77.80% ஆக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.