3.29 லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு… மத்திய அரசு வெளியிட்ட ரிப்போர்ட்!

 

3.29 லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு… மத்திய அரசு வெளியிட்ட ரிப்போர்ட்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, சிகிச்சைக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிக்கலை சுகாதாரத்துறை எதிர்கொள்கிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து வெளிவரும் செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. இதனிடையே, மூன்றாவது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கையை இப்போதே தொடங்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

3.29 லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு… மத்திய அரசு வெளியிட்ட ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் 3,56,082 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் 3,876 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 37,15,221 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3.29 லட்சமாக குறைந்த கொரோனா பாதிப்பு… மத்திய அரசு வெளியிட்ட ரிப்போர்ட்!

இதன் மூலம், மொத்த பாதிப்பு 2,29,92,517 ஆக அதிகாரித்துள்ளதாகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,90,27,304 ஆக அதிகரித்துள்ளதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்கு மேல் இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3.29 லட்சமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.