இந்தியாவில் ஒரே நாளில் 2.07 லட்சம் பேர் குணமடைந்தனர்… முழு விவரம் இதோ!

 

இந்தியாவில் ஒரே நாளில் 2.07 லட்சம் பேர் குணமடைந்தனர்… முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக பாதிப்பு குறைந்திருந்தாலும் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக மீளவில்லை. கிட்டத்தட்ட 17 லட்சம் மக்கள் கொரோனா சிகிச்சையில் இருக்கிறார்கள். பாதிப்பை கட்டுப்படுத்தி விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில், இந்தியா விரைவில் மீண்டெழும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 2.07 லட்சம் பேர் குணமடைந்தனர்… முழு விவரம் இதோ!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 24 மணி நேரத்தில் 2,713 பேர் உயிரிழந்ததாகவும் 2,07,071 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,35,993 ஆக குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 2.07 லட்சம் பேர் குணமடைந்தனர்… முழு விவரம் இதோ!

கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1.32 லட்சம், நேற்று 1.34 லட்சமாக இருந்த நிலையில் இன்று 1.32 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக பாதிப்பு அதே நிலையில் இருப்பினும் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 2.07 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.